ADDED : செப் 23, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; பட்டணம்காத்தான் அம்பேத்நகரில் விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
திருப்புல்லாணி வட்டார வேளாண் உதவி இயக்குநர் செல்வம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை தலைவர் விஜய லிங்கம், கால்நடை உதவி மருத்துவர் சித்தி மர்ஜிதா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
விஜயலிங்கம் பேசுகையில், நாட்டுக் கோழிகளில் கிரிராஜா, வன ராஜா போன்ற அதிக முட்டையிடும் தன்மை கொண்ட கோழிகளை தேர்ந்தெடுத்து வளர்க்க வேண்டும் என்றார். உதவி இயக்குநர் செல்வம் பேசுகையில், கால்நடை களுக்கு புரதசத்து மிகுந்த அசோலாவை தீவனமாக வழங்க வேண்டும் என்றார்.