/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயிர் இன்சூரன்ஸ் பதிவுக்கு பயிற்சி
/
பயிர் இன்சூரன்ஸ் பதிவுக்கு பயிற்சி
ADDED : அக் 25, 2024 04:58 AM
ஆர்.எஸ்.மங்கலம்: பிரதமர் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில்பதிவு செய்வது குறித்து பொது சேவை மைய பொறுப்பாளர்களுக்கு வேளாண் துறை சார்பில் செயல்முறை பயிற்சி வகுப்பு ஆர்.எஸ்.மங்கலத்தில் நடந்தது.
நெல், மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் போது அவர்கள் இழப்பீடு பெறும் வகையில் பிரதமர்பயிர் இன்சூரன்ஸ் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல் விவசாயிகள் நவ.15 வரை இத்திட்டத்தில்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது சேவை மையங்கள் (சி.எஸ்.சி.,) மூலம் விவசாயிகள் பதிவு மேற்கொள்ளும் வகையில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் பொது சேவை மைய பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் (பயிர் காப்பீடு) கீதாஞ்சலி தலைமை வகித்தார். ஆர்.எஸ்.மங்கலம் வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) சுப்ரியா, சி.எஸ்.சி., பொது சேவை மைய மாவட்ட மேலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர்.
பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்வதற்கு விவசாயிகளிடமிருந்து பெற வேண்டிய ஆவணங்கள்குறித்தும், கணினியில் பதிவு செய்யும் வழிமுறைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கினர். திருவாடானை வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) தினேஸ்வரி, பஜாஜ் இன்சூரன்ஸ் மாவட்ட மேலாளர் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.