ADDED : நவ 16, 2025 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: விவேகானந்தா கேந்திரம் சார்பில் கன்னியாகுமரியில் மாநில அளவிலான நகர்புற பண்பாட்டு போட்டிகள் நடந்தது. இதில் ராமநாதபுரம் மூலக்கொத்தளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உரிமையாளர்கள் நலச்சங்கம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவி அஷிபா பாத்திமா அன்னை சாரதா தேவியின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியில் இரண்டாம் பரிசும், மாணவி ஊர்மிளா ஸ்ரீ திரவுபதி கண்ணனுக்கு செய்யும் பிரார்த்தனை என்ற தலைப்பில் ஒப்புவித்தல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளனர்.
வெற்றிபெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் கணேசன், செயலாளர் கார்த்திக் ராமன், முதல்வர் செங்கொடி, ஆசிரியர்கள் பாராட்டினர்.

