/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலை
/
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலை
ADDED : அக் 07, 2024 10:58 PM
திருவாடானை : தமிழகத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் நிலையில் கடந்த இரு நாட்களாக திருவாடானை தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் மழை பெய்கிறது.
தொண்டி அருகே சோழகன்பேட்டையில் பிச்சைமுத்து வீட்டில் மரம் சாய்ந்ததில் வீடு சேதமடைந்தது.
தாசில்தார் அமர்நாத் கூறியதாவது:
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மணல் மூடைகள், மணல் அள்ளும் இயந்திரம், மரங்களை அறுக்கும் கருவிகள் தயார் நிலையில் உள்ளன.
திருவாடானை தாலுகாவில் பணிபுரியும் வி.ஏ.ஓ.,க்கள் பணியிடங்களில் தங்கியிருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தாலுகா அலுவலகத்தில் 24 மணி நேரம் பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். மழை சேதம் குறித்து கிராம மக்கள் புகார் செய்தால் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு உடனே சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.