/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜனாதிபதி தேநீர் விருந்து எய்ம்ஸ் இயக்குநருக்கு அழைப்பு
/
ஜனாதிபதி தேநீர் விருந்து எய்ம்ஸ் இயக்குநருக்கு அழைப்பு
ஜனாதிபதி தேநீர் விருந்து எய்ம்ஸ் இயக்குநருக்கு அழைப்பு
ஜனாதிபதி தேநீர் விருந்து எய்ம்ஸ் இயக்குநருக்கு அழைப்பு
ADDED : ஜன 21, 2025 06:21 AM

ராமநாதபுரம்: குடியரசு தினத்தில் (ஜன.,26) ஜனாதிபதி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் அனுமந்தராவுக்கு ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜன.,26 ல் மாலை 4:00 மணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில் சிறப்பு தேநீர் விருந்து புதுடில்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் நடக்கிறது. இந்த விழாவிற்கு கல்வி, கல்வித்துறையில் சிறப்பான பங்களிப்பினை வழங்கும் 15 நபர்கள் இந்தியா முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலிருந்து மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் அனுமந்தராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனுமந்தராவ் மயக்கவியல் துறை நிபுணர். கர்னுால் மருத்துவக்கல்லுாரி, மணிப்பால் மருத்துவக்கல்லுாரியில் படித்தவர். திருப்பதியில் உள்ள மகளிர் மருத்துவக்கல்லுாரியின் முதல்வராகவும், மருத்துவ மேற்பார்வையாளராகவும், ஸ்ரீவெங்கடேஸ்வரா இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் பல்கலையின் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

