/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பலாப்பழம் வரத்து குறைவால் விலை உயர்வு: கிலோ ரூ.50
/
பலாப்பழம் வரத்து குறைவால் விலை உயர்வு: கிலோ ரூ.50
ADDED : பிப் 21, 2024 11:08 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்திற்கு வெளி மாவட்டங்களிலிருந்து பலாப்பழம் வரத்துகுறைவால் விலை உயர்ந்து கிலோ ரூ.50க்கு விற்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள்குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக மா, பலா, மாதுளை ஆகிய பழங்கள்வெளியூர்களில் இருந்து வாங்கி வந்து ராமநாதபுரம்வாரச்சந்தையில் விற்கின்றனர். தற்போது பலாப்பழம் வரத்துகுறைவால் கிலோ ரூ.50க்கு விற்கின்றனர்.
வாரச்சந்தை வியாபாரி சி.ராஜேஸ் கூறுகையில், புதுக்கோட்டையில் இருந்து மொத்தமாக பலாப்பழங்கள் வாங்கி வந்து விற்கிறோம்.
தற்போது வரத்து குறைவால்கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.30க்கு விற்றது தற்போது ரூ.20 விலை உயர்ந்துள்ளது என்றார்.