/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிரதமர் வருகை: பாம்பன் ரயில் பாலத்தை ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் ஆய்வு
/
பிரதமர் வருகை: பாம்பன் ரயில் பாலத்தை ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் ஆய்வு
பிரதமர் வருகை: பாம்பன் ரயில் பாலத்தை ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் ஆய்வு
பிரதமர் வருகை: பாம்பன் ரயில் பாலத்தை ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் ஆய்வு
ADDED : ஏப் 02, 2025 02:54 AM

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு ஏப்.,6ல் பிரதமர் மோடி வருவதையொட்டி நேற்று ராமேஸ்வரம் பாம்பனில் தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் ஆய்வு செய்தார்.
பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலத்தை ஏப்.,6ல் பிரதமர் மோடி திறக்க உள்ளார். இதற்கான விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம், போலீஸ் துறை செய்து வருகின்றன.
மண்டபத்தில் ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி வந்திறங்கி காரில் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் வருகிறார். அங்கிருந்து பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்கிறார். பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்து விட்டு ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தமிழ்நாடு அரசு தங்கும் விடுதி வளாகத்தில் திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.
நேற்று ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் வந்த தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர், பிளாட்பார பணிகள் மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
பின் பிரதமர் பங்கேற்கும் விழா மேடை, பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஆய்வு செய்தார். மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்ஸவா, ரயில்வே பாதுகாப்பு படை சீனியர் எஸ்.பி.,செந்தில்குமரன் மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.