/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனியார் கைத்தறி நெசவாளர்களுக்கு 30 சதவீதம் கூலி உயர்வு வேண்டும்
/
தனியார் கைத்தறி நெசவாளர்களுக்கு 30 சதவீதம் கூலி உயர்வு வேண்டும்
தனியார் கைத்தறி நெசவாளர்களுக்கு 30 சதவீதம் கூலி உயர்வு வேண்டும்
தனியார் கைத்தறி நெசவாளர்களுக்கு 30 சதவீதம் கூலி உயர்வு வேண்டும்
ADDED : அக் 16, 2024 05:11 AM
பரமக்குடி : தனியார் கைத்தறி நெசவாளர்களுக்கு 30 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என பரமக்குடியில் நடந்த தமிழக பாரதிய கைத்தறி நெசவுத் தொழிலாளர் பேரவை பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். துணை பொதுச்செயலாளர் செந்தில் பாண்டியன் முன்னிலை வகித்தார். தனியாரிடம் கைத்தறி நெசவுத் தொழில் செய்து வரும் தொழிலாளர்களுக்கு 30 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு பேச்சு வார்த்தையின் போதும் அறிவிக்கப்படும் கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும்.
நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்களுக்கு வழக்கம் போல் கூலியை பணமாக வழங்க வேண்டும். காசோலை மூலம் கூலி வழங்கும் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும். கூட்டுறவு கைத்தறி சேலை உள்ளிட்ட ரகங்களுக்கு சீலிங்கை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வரும் ஆண்டிற்கான புதிய மாநிலத் தலைவர் நடராஜன், பொதுசெயலாளர் பாபுலால், பொருளாளர் காசி விஸ்வநாதன் மற்றும் 3 துணைத் தலைவர்கள், 3 செயலாளர்கள் உட்பட 9 செயற்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர்.
தமிழக அரசால் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற பரமக்குடி பெண் நெசவாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.