ADDED : ஆக 20, 2025 06:53 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.22) நடைபெறவுள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் வேலை தேடுவோர் கலந்துகொள்ளலாம்.
இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்யலாம்.
அதுபோல் பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் பணிநியமனம் பெறலாம்.
ஆக.22ல் காலை 10:00 மணிக்கு ராமநாத புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது.
விருப்பமுள்ளவர்கள் பயோடேட்டா, கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டு, புகைப்படத்துடன் வர வேண்டும்.
தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது.
தனியார் நிறுவனங்கள், வேலைதேடுபவர்கள் (www.tnprivatejobs.tn.gov.in) எனும் ஆன்லைன் முகவரியில் பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.