/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனியார் அஞ்சலகம்: விண்ணப்பிக்கலாம்
/
தனியார் அஞ்சலகம்: விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 26, 2025 03:37 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தனியார் அஞ்சலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் அறிவித்துள்ளார்.
அஞ்சல் சேவையை விரிவுபடுத்தவும் வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தவும் புதுப்பிக்கப்பட்ட உரிமையாளர் திட்டத்தின் கீழ் அஞ்சலக பிரான்சிஸ் அவுட்லெட் அமைக்க அஞ்சல்துறை அனுமதித்துள்ளது.
அஞ்சல் அலுவலகங்கள் குறைவாக, போதிய அஞ்சல் அலுவலகம் இல்லாத பகுதிகளில் அமைக்க அனுமதிக்கப்படும்.
இதன் மூலம் தபால் முத்திரைகள் விற்பனை, விரைவு அஞ்சல் முன்பதிவு, பதிவு அஞ்சல், மணியார்டர் உள்ளிட்ட அஞ்சல் சேவைகள் வழங்கப்படும்.
அஞ்சல் செயல்பாடு குறித்து தெரிந்தவர்கள், முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை ராமநாதபுரம் கோட்ட அலுவலகத்திலும், https://utilities.cept.gov.in எனும் இணையதளத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.