/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல்வி திருவிழா பேச்சு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
/
கல்வி திருவிழா பேச்சு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
கல்வி திருவிழா பேச்சு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
கல்வி திருவிழா பேச்சு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : ஜூலை 15, 2025 10:16 PM
ராமநாதபுரம்; ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த காமராஜர் பிறந்த தின கல்வித்திருவிழா பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
ராமநாதபுரத்தில் ஸ்வார்ட்ஸ் பள்ளியில் நடந்த பேச்சு போட்டியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். கோட்டாட்சியர் ராஜமனோகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நாடார் மகாஜன சங்க மாவட்ட செயலாளர் குகன் வரவேற்றார்.
செயற்குழு உறுப்பினர்கள் வங்கி மேலாளர் இளங்கோ, டாக்டர் சுந்தரம், கீழக்கரை தலைவர் மணிகண்டன், நிர்வாகி பாலாஜி சரவணன், ஒன்றிய தலைவர் ஜெயமுருகன், வழக்கறிஞர் சக்திவேல் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். 6 முதல் 8ம் வகுப்பு பிரிவில் முதலிடத்தில் அரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி, தனுஷ்கா, இரண்டாமிடம் எக்ககுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முகமதுநவ்பில், மூன்றாம் இடத்தில் ராமேஸ்வரம் அமிர்தாவித்தயாலயம் இளவேந்தன், கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசியா ஆகிய இருவரும் பெற்றனர்.
மேலும் 9, 10 ம் வகுப்பு பிரிவில் முதலிடம் ராமநாதபுரம் லுாயிஸ் லெவல் பள்ளி தஸ்வன்ராஜ், இரண்டாம் இடம் சித்தார்கோட்டை, முகமதியா மேல்நிலைப்பள்ளி அஜ்ரூன்ராபியா, மூன்றாமிடம் மேதலோடை நாடார் மகாஜனசங்கம் மேல்நிலைப்பள்ளி துளசிபாரத் ஆகியோர் பெற்றனர். பிளஸ்1, பிளஸ் 2 பிரிவில் முதலிடம் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி ஜெய்அதிதா, இரண்டாமிடம் அரியூர், புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி ஜெர்லின்ஜெரோபியா, மூன்றாமிடம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மரியம் நுாஹா ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, பராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.