/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அண்டகுடி கிராம மக்கள் எதிர்ப்பு
/
அண்டகுடி கிராம மக்கள் எதிர்ப்பு
ADDED : டிச 24, 2024 04:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: பரமக்குடி நகராட்சியுடன் எஸ்.அண்டக்குடி ஊராட்சி ராஜீவ் நகரை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அப்போது நகராட்சியுடன் தங்களது ஊரை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதில் அண்டக்குடி ராஜீவ் நகரில் 138 குடியிருப்புகள் உள்ளன.கூலிதொழில் செய்தும், நுாறு நாள் வேலையில் மக்கள் ஈடுபடுகின்றனர்.
எனவே பரமக்குடி நகராட்சியுடன் ராஜீவ்நகரை இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.