/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓய்வூதியத்தை உயர்த்தக்கோரி ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியத்தை உயர்த்தக்கோரி ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியத்தை உயர்த்தக்கோரி ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியத்தை உயர்த்தக்கோரி ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 14, 2025 03:50 AM

ராமநாதபுரம்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் 95ன் படி ஓய்வூதியம் பெறுவோருக்கு தமிழக அரசு ரூ.2000 சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே ஓய்வு பெற்றோர் நலசங்கத்தினர் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் ஷாஜகான் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது: மத்திய அரசு சார்பில் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் 1995 ல் ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக இதே தொகை வழங்கப்பட்டு வருகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, ஹரியானா, புதுச்சேரி உள்ளிட்டவற்றில் மாநில அரசு சார்பில் ரூ.4000 ஓய்வூதியம் வழங்குவதை உறுதி செய்துள்ளது.
அதே போல் தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு ரூ.2000 வழங்க வேண்டும் என்றார்.
சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி, ஓய்வு பெற்றோர் நலச்சங்க மாவட்ட செயலாளர் வெங்கட சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.