
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் மேலவசையில் உள்ள மஞ்சக்குளத்து காளியம்மன் கோயிலில் புரட்டாசி ஞாயிறு சிறப்பு பூஜை நடந்தது.
மூலவர்கள் மஞ்சக்குளத்து காளியம்மன், ராக்கச்சி அம்மன், தர்ம முனீஸ்வரர், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. குழந்தை இல்லாத தம்பதியினர் குழந்தை வரம் கிடைத்தவுடன் இக்கோயிலுக்கு நேர்த்திக்கடனாக கிடா மற்றும் சேவல் பலியிட்டு பனை ஓலை பட்டையில் அசைவ அன்னதானம் வழங்குகின்றனர்.