/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முளைத்த நெற்யிர்கள் கருகும் அவல நிலை
/
முளைத்த நெற்யிர்கள் கருகும் அவல நிலை
ADDED : அக் 14, 2025 03:49 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக முளைத்த நெல் பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான இருதயபுரம், மங்களம், நெடும்புளிக்கோட்டை, பெத்தார்தேவன் கோட்டை, அத்தானுார், துத்தியேந்தல், காவனுார், கருங்குடி, கொத்தியார் கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த மாதம் நெல் விதைப்பு செய்யப்பட்டது.
நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நிலவிய ஈரப்பதத்தால் சில பகுதிகளில் உள்ள வயல்களில் நெற்பயிர்கள் முளைத்தன.
இந்நிலையில், அதன் பின் தொடர்ந்து நிலவும் வறட்சியால் பெரும்பாலான வயல்களில் முளைத்த நெற்பயிர்களும் வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கருகி வருகின்றன.
இதனால் விவசாயிகள் பாதிப்பை சந்தித்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில், நெல் பயிர்கள் முளைத்த சில வயல்களில் காலை நேரத்தில் பார்க்கும் போது நெற்பயிர்கள் பசுமையாக உள்ளன. வெயில் நேரம் வந்தவுடன் நெற்பயிர்கள் கருகி விடுகின்றன என்றனர்.