/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓமன், குவைத் நாடுகளில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க பிப்.26ல் போராட்டம்
/
ஓமன், குவைத் நாடுகளில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க பிப்.26ல் போராட்டம்
ஓமன், குவைத் நாடுகளில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க பிப்.26ல் போராட்டம்
ஓமன், குவைத் நாடுகளில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க பிப்.26ல் போராட்டம்
ADDED : பிப் 15, 2024 05:09 AM
ராமநாதபுரம்: -ஓமன், குவைத் நாடுகளில் மீன் பிடி தொழிலுக்காக சென்றவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவிப்பதால் அவர்களை மீட்க நடவடிக்கை கோரி பிப்.26 ல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடக்கிறது.
கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி கூறியதாவது:
திருப்பாலைக்குடியை சேர்ந்தவர்கள் கார்த்திக்22, ஹரிஹரபாண்டி43, மோர்ப்பண்ணை சந்துரு 20, பாசிபட்டினம் வினோத்குமார் 27, ஆகியோர் குவைத் நாட்டில் ஒப்பந்த தொழிலாளர்களாக தொழில் செய்தனர். அங்கு போதை கடத்தல் வழக்கில் சிக்க வைத்து கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பாலைக்குடி சரவணக்குமார் 29, ரமேஷ் 37, முத்துகிருஷ்ணன் 45, மம்மது 48, மோர்ப்பண்ணை வைரச்செல்வம் 36, ஆகிய 5 பேரும் 2023 செப்.,ல் ஓமன் நாட்டில் உள்ள அல்மசீரா தீவு பகுதியில் ஒப்பந்த மீன்பிடி தொழிலாளர்களாக பணிபுரிந்தனர். அங்குள்ள உரிமையாளர் சம்பளம் தராமல் மீனவர்களை அலைக்கழிப்பு செய்கின்றனர். இவர்கள் தாய் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஓமன், குவைத் நாட்டில் உள்ள மீனவர்களை மீட்க கோரி பிப்.26ல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு செய்யும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

