/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இனாம் நிலங்களின் உரிமைக்காக டிச.10ல் காத்திருப்பு போராட்டம்
/
இனாம் நிலங்களின் உரிமைக்காக டிச.10ல் காத்திருப்பு போராட்டம்
இனாம் நிலங்களின் உரிமைக்காக டிச.10ல் காத்திருப்பு போராட்டம்
இனாம் நிலங்களின் உரிமைக்காக டிச.10ல் காத்திருப்பு போராட்டம்
ADDED : டிச 08, 2024 06:21 AM
ராமநாதபுரம் : இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யக்கோரி டிச.10ல் சென்னை தலைமைச் செயலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த இனாம் நில உரிமை மீட்பு கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 13 லட்சம் ஏக்கர் இனாம் நிலங்கள்ஜமீன் ஒழிப்பு நில சீர்திருத்த நடவடிக்கைகளின் போது 'நிலம் மக்களுக்கு பணம் கோயிலுக்கு' என்ற அடிப்படையில் கேரளாவில் மக்களுக்கே முழு உரிமை வழங்கப்பட்டது.கர்நாடகா, குஜராத், ஆந்திர மாநிலங்களில் விடுபட்டவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.
அதேபோல் தமிழகத்தில் உள்ள 13 லட்சம் ஏக்கர் இனாம் நிலங்களின் அனுபவத்தில் உள்ளவர்களுக்கான நில உரிமையை உறுதி செய்யக்கோரி கோரிக்கை நிறைவேறும் வரை சென்னை தலைமை செயலகம் முன் டிச.10 முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இனாம் நில உரிமை மீட்பு கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணை பொதுசெயலாளர் நேதாஜி கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளில் குத்தகையாளர்களாக அல்லது வாடகையாளர்களாக நயவஞ்சகமாக மாற்றப்பட்ட அனைத்து விவசாயிகளின், பொதுமக்களின் குத்தகைகளையும் ரத்து செய்ய வேண்டும்.
இனாம்- ஜமீன் ஒழிப்பின்போது பட்டா பெற்று அனுபவத்தில் உள்ள மக்களின் நில உரிமையை பத்திரப்பதிவுக்கு தடை ஏற்படுத்துவதன் மூலமும், பூஜ்ஜிய மதிப்பு செய்வதன் மூலமும் பறிக்கும் முயற்சியை கைவிட்டு முறையான சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மக்களின் அறியாமையாலும், அரசின் தவறுகளாலும் இனாம்- ஜமீன் ஒழிப்பு நடந்த போது பட்டா பெற தவறிய மக்களுக்கு பட்டா பெறுவதற்கான வழிமுறையை கேரளா, ஆந்திரா, குஜராத், கர்நாடகா மாநிலங்கள் போல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது என்றார்.