/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏழை மணமகளுக்கு 51 வகை சீர்வரிசை பொருட்கள் வழங்கல்
/
ஏழை மணமகளுக்கு 51 வகை சீர்வரிசை பொருட்கள் வழங்கல்
ADDED : ஜூன் 06, 2025 11:57 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஏழை மணமகளுக்கு நாடார் மகாஜன சங்கம் சார்பில் 51 வகை சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் ஏழை மணப்பெண்களை கண்டறிந்து அவர்களது திருமணத்தின் போது சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 60 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டுள்ளது.
சத்திரக்குடி அருகே உள்ள எஸ்.காரைக்குடியை சேர்ந்த சரவணன் செல்வராணி தம்பதியரின் மகளான கார்த்திகாவிற்கு திருமணம் ஜூன் 8ல் வழிவிடுமுருகன் கோயிலில் நடக்கவுள்ளது. இந்த தம்பதியர் வறுமை நிலையில் இருப்பதை ராமநாதபுரம் மாவட்ட நாடார் மகாஜன சங்க மாவட்ட செயலாளர்குகனுக்கு தெரிவிக்கப்பட்டது.
அவரது முயற்சியால் மணமக்களுக்கு வெண்கல குத்து விளக்கு, பொங்கல் பானை, மிக்சி உள்ளிட்ட 51 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை ராமநாதபுரம் வடதிசை சத்திரிய நாடார் உறவின் முறை தலைவர் ஜவஹர், ரோட்டரி சங்க செயலாளர் பாலமுருகன், மாவட்ட துணைத்தலைவர் தெட்சிணாமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் கமலி ஆகியோர் வழங்கினர்.