/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளிக்கு விளையாட்டு சாதனங்கள் வழங்குதல்
/
பள்ளிக்கு விளையாட்டு சாதனங்கள் வழங்குதல்
ADDED : ஏப் 20, 2025 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே உலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு முயல் அறக்கட்டளை, கிராம மக்கள் இணைந்து விளையாட்டு சாதனங்கள், இருக்கைகள் வழங்கும் விழா நடந்தது.
பட்டிமன்ற பேச்சாளர் துரைப்பாண்டி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஹேமலதா முன்னிலை வகித்தார்.
மாணவர்களின் நலன் கருதி கிராம மக்கள் மற்றும் முயல் அறக்கட்டளை இணைந்து மாணவர்களுக்கு புதிதாக இருக்கைகள், விளையாட்டு உபகரணங்கள், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் ஏற்பாடு செய்து தந்தனர்.
விழாவில் கிராம மக்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.