/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி பம்பர் காட்டன் சேலைக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு ஏற்பாடு

ADDED : ஜன 02, 2025 11:26 PM
பரமக்குடி;பரமக்குடியில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் பம்பர் காட்டன் சேலைகளுக்கு புவிசார் குறியீடு பெற மத்திய அரசுக்கு தமிழக அரசு மூலம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என உதவி கைத்தறி இயக்குனர் சேரன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
பரமக்குடி சரகத்தில் கைத்தறி நெசவாளர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் எமனேஸ்வரம் 1 மற்றும் 2 கைத்தறி குழுமத்தின் சார்பில் 213 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.1.29 கோடி மதிப்பிலான 1054 உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.
பரமக்குடி, எமனேஸ்வரம் தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான ஜீவா நகரில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்கப்பட்டு 40 தறிகளுடன் இயங்க உள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.2 கோடியாக உள்ள நிலையில் முதல் கட்டமாக ரூ.64 லட்சம் ஒதுக்கி கட்டடம் கட்டப்பட உள்ளது.
தொடர்ந்து பரமக்குடியில் நெய்யப்பட்டு வரும் பம்பர் காட்டன் சேலைகளுக்கு புவிசார் குறியீடு பெறும் வகையில், மத்திய அரசுக்கு தமிழக அரசு மூலம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.