/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பி.எஸ்.என்.எல்., அலுவலகம் ஜப்தி சிக்னல் நிறுத்தம்: மக்கள் தவிப்பு
/
பி.எஸ்.என்.எல்., அலுவலகம் ஜப்தி சிக்னல் நிறுத்தம்: மக்கள் தவிப்பு
பி.எஸ்.என்.எல்., அலுவலகம் ஜப்தி சிக்னல் நிறுத்தம்: மக்கள் தவிப்பு
பி.எஸ்.என்.எல்., அலுவலகம் ஜப்தி சிக்னல் நிறுத்தம்: மக்கள் தவிப்பு
ADDED : அக் 03, 2024 04:21 AM
தொண்டி: தொண்டியில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகம் ஜப்தி செய்யபட்டதால், சிக்னல் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்தவர் சித்திமர்ஜானா 45. தொண்டியில் உள்ள இவருக்கு சொந்தமான கட்டடம் ஒப்பந்தபடி 15 ஆண்டுகள் வாடகைக்கு விடபட்டது.
15 ஆண்டுகள் முடிந்த நிலையில் அலுவலகத்தை பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் காலி செய்யவில்லை.
வாடகையும் செலுத்தவில்லை. திருவாடானை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தை காலி செய்ய உத்தரவிடக் கோரி சித்திமர்ஜானா வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தை ஜப்தி செய்து சித்திமர்ஜானாவிடம் ஒப்படைக்க நீதிபதி மனிஷ்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று முன்தினம் தொண்டி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் இருந்த டவர் உட்பட பொருட்கள் ஜப்தி செய்யபட்டது. பி.எஸ்.என்.எல்., சிக்னல் நிறுத்தபட்டதால் மக்கள்தவிக்கின்றனர்.
இது குறித்து தொண்டி மக்கள் கூறியதாவது- தொண்டி பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளில் வசிப்பதால் பி.எஸ்.என்.எல்., அலைபேசி தொடர்பு பயனாக இருந்தது.
பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தின் மெத்தனபோக்கால் தொண்டி பகுதியில் சிக்னல் நிறுத்தபட்டதால் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள உறவினர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை.
இது தவிர அரசு அலுவலகங்களிலும் நெட்வொர்க் முடங்கிவிட்டது. பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.