/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
/
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
ADDED : அக் 04, 2025 03:36 AM
முதுகுளத்துார்: கமுதி பஸ் ஸ்டாண்ட் அருகே ரோட்டில் நாய் கூட்டமாக உலா வருவதால் வாகன ஓட்டிகள், மக்கள் அச்சப்படுகின்றனர்.
கமுதி பேரூராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இரவு நேரத்தில் கமுதி பஸ் ஸ்டாண்ட், பஜார் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நாய்கள் கூட்டமாக திரிகின்றன. இதனால் பஸ் ஸ்டாண்டில் இருந்து வீட்டிற்கு தனியாக நடந்து செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் ஒன்று சேர்ந்து துரத்துகின்றன.
டூவீலரில் செல்பவர்களையும் தெருநாய்கள் விரட்டி கடிக்க பாய்கின்றன. இதனால் நடந்து செல்வதற்கே மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.