/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி நகராட்சியில் ரூ.13.50 கோடியில் 360 கடைகளுடன் வாரச்சந்தை திறப்பு

ADDED : அக் 04, 2025 03:36 AM

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் 13 கோடியே 50 லட்சத்தில் கூரை வசதியுடன் கூடிய 360 கடைகள் கட்டப்பட்ட வளாகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இங்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் வாரச்சந்தை கூடும் நிலையில் காய்கறிகள், மளிகை, பழங்கள், கருவாடு விற்பனை மற்றும் கால்நடை சந்தை நடக்கிறது. இப்பகுதி முழுவதும் தரை மணலாக காணப்பட்ட சூழலில் கடைகள் பாதுகாப்பான முறையில் இயங்கும் வகையில் வணிக வளாகத்துடன் கூடிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இதனை நேற்று ராமநாதபுரத்தில் நடந்த நிகழ்ச்சிகள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, கமிஷனர் தாமரை, இன்ஜீனியர் கோமதி சங்கர், துணை பொறியாளர் சுரேஷ் மற்றும் கவுன்சிலர்கள் பார்வையிட்டனர்.