நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி: கடலாடியில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 108வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னிலை வகித்தார்.
அமைப்புச் செயலாளர் மகேந்திரன், எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் சுந்தரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., மலேசியா பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். கடலாடி நகர செயலாளர் முருகேசன் பாண்டியன் நன்றி கூறினார்.