ADDED : ஜூலை 07, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சோழந்துார் பிர்கா அரியான்கோட்டை கிராமத்தில் நாளை (ஜூலை 9ல்) மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் தலைமையில் நடக்கிறது.
அப்பகுதிக்கு உட்பட்ட பயனாளிகள் முகாமில் பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், நில அளவீடு, உதவித்தொகை உள்ளிட்ட மனுக்களை அளித்து பயனடையுமாறு ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் அமர்நாத் கேட்டுக்கொண்டார்.