ADDED : பிப் 19, 2024 11:19 PM
பரமக்குடி : பரமக்குடி ஊராட்சி பி.புத்துார் கிராமத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.
கலெக்டர் பேசியதாவது: இப்பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளதால் அதிகளவில் விவசாயப் பணிகளில் ஈடுபட வேண்டும். ஊராட்சி வளர்ச்சிக்கு தேவையான திட்டப் பணிகளை கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று பொதுமக்கள் பணிகளை தேர்வு செய்ய உறுதுணையாக இருக்க வேண்டும்.
பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்ற முடியாவிட்டாலும், படிப்படியாக நிறைவேற்றி தனிநபர் பொருளாதார மேம்பாட்டிற்கு வசதி செய்து தரப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் சுய தொழிலில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் நிலையான வருமானம் கிடைக்கும் என்றார்.
பரமக்குடி தாசில்தார் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் தேவபிரிய தர்ஷினி மற்றும் அரசு அலுவலர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

