/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கருத்து பரப்புரை விளக்க கூட்டம்
/
கருத்து பரப்புரை விளக்க கூட்டம்
ADDED : பிப் 01, 2025 04:56 AM
கமுதி: கமுதியில் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான கருத்து பரப்புரை விளக்க கூட்டம் நடந்தது.
மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கத் தலைவர் பால்சாமி தலைமை வகித்தார். கூட்டமைப்பின் தேசிய பொறுப்பாளர் சுந்தரபாபு கூறியதாவது:
உழவர்கள், வீட்டு வேலை தொழிலாளர்கள், வணிகர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், துாய்மைப் பணியாளர்கள் உட்பட பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர்களின் வளர்ச்சிக்கும், அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்படாமல் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளை களையவும், ஒருங்கிணைக்கவும் கருத்து பரப்புரை கூட்டம் நடத்தப்படுகிறது.
நாட்டின் அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுடன் நேரடியாக உரையாடவும், குரல் கொடுக்க போராட்ட நிகழ்வை எடுத்துக் கூறவும் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு பரப்புரை மேற்கொள்வதாக கூறினார்.
துணைத்தலைவர் குமரவேல், பசும்பொன் தேவர் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் தலைவர் சுந்தர் கலந்து கொண்டனர்.