ADDED : அக் 15, 2024 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே சீமானேந்தல் கிராமத்தில் பருவமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி தர்ம முனீஸ்வரர், முப்பிடாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல், முளைப்பாரி விழா நடந்தது.
விழாவில் தினமும் பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் வந்தனர். இதனை முன்னிட்டு காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.
தர்ம முனீஸ்வரர், முப்பிடாரியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகை அபிஷேகம், பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
முளைக்கொட்டு திண்ணையில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் முளைப்பாரி துாக்கி பெருமாள் கோயில் கண்மாய் கரையில் உள்ள தண்ணீரில் கரைக்கப்பட்டது.
ஏற்பாடுகளை சீமானேந்தல் கிராம மக்கள் செய்தனர்.