/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொட்டல் பச்சேரியில் புரட்டாசி உற்ஸவ விழா
/
பொட்டல் பச்சேரியில் புரட்டாசி உற்ஸவ விழா
ADDED : அக் 09, 2025 11:08 PM
சிக்கல்: சிக்கல் அருகே பொட்டல்பச்சேரியில் உள்ள மூக்கரப்பிள்ளை முனீஸ்வரர், காளியம்மன், விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புரட்டாசி உற்ஸவ விழா நடந்தது. முன்னதாக சிக்கல் பெரிய ஊருணி அருகே உள்ள தர்ம முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
நேற்று முன்தினம் பொட்டல் பச்சேரி விநாயகர் கோயிலில் பொங்கல் வைக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க ரெட்டைமலை அய்யனார் கோயில், நீராவி காளி கோயில், சப்பாணி, உலகம்மன், கருப்பண்ணசாமி கோயிலில் வழியாக ஊர்வலமாக வந்து கிராம மக்கள் பூஜை செய்தனர். தர்ம முனீஸ்வரர் கோயில் முன்பு கிடாய்கள் பலியிடப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவில் கிராமிய தெம்மாங்கு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு பொட்டல்பச்சேரி விநாயகர் கோயிலில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தனர். பின்னர் மூக்கரப்பிள்ளை முனீஸ்வரருக்கு கிடாய் வெட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவில் சின்ன கருப்பு, பெரிய கருப்பு என்ற பக்தி நாடகம் நடந்தது. ஏற்பாடுகளை பொட்டல் பச்சேரி கிராம மக்கள் செய்திருந்தனர்.