/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜன.,5ல் புதிரை வண்ணார் முகாம்
/
ஜன.,5ல் புதிரை வண்ணார் முகாம்
ADDED : ஜன 03, 2026 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரில் ஜன., 5ல் புதிரை வண்ணார் மக்களுக்கான முகாம் நடக்கிறது.
திருவாடானை தாசில்தார் ஆண்டி கூறியதாவது:
திருவாடானை தாலுகா வில் வசிக்கும் புதிரை வண்ணார் மக்களுக்கான சிறப்பு முகாம் திருவெற்றியூர் சமுதாய கூடத்தில் ஜன.,5ல் நடக்கிறது. காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை முகாம் நடைபெறும்.
இதில் ஆதார் அட்டை, ஜாதிச் சான்று, ரேஷன் கார்டு, பிறப்புச் சான்று போன்ற பல்வேறு நலத்திட்டங்களுக்கான மனுக்கள் பெறப்படும். திருவாடானை தாலுகாவில் வசிக்கும் புதிரை வண்ணார் மக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றார்.

