/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவெற்றியூர் ரோட்டில் பிளக்ஸ் பேனரால் பாதிப்பு
/
திருவெற்றியூர் ரோட்டில் பிளக்ஸ் பேனரால் பாதிப்பு
திருவெற்றியூர் ரோட்டில் பிளக்ஸ் பேனரால் பாதிப்பு
திருவெற்றியூர் ரோட்டில் பிளக்ஸ் பேனரால் பாதிப்பு
ADDED : ஜன 03, 2026 06:33 AM
திருவாடானை: திருவெற்றியூர் செல்லும் விலக்கு ரோட்டில் பிளக்ஸ் பேனர்களால் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
திருவாடானையில் இருந்து திருவெற்றியூர் செல்லும் விலக்கு ரோட்டில் விதிமுறையை மீறி கடை விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
திருவாடானை- திருவெற்றியூர் முக்கிய சாலையாக இருப்பதால் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. தினமும் திருவெற்றியூருக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். திருவெற்றியூர் விலக்கில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுனர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இப்பேனர்கள் தொண்டி சாலையை மறைப்பதால் விபத்து அபாயம் உள்ளது. விதி முறையை மீறி வைக்கப்பட்ட பேனரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

