/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இன்று, நாளை நடக்கிறது வாக்காளர் சிறப்பு முகாம்
/
இன்று, நாளை நடக்கிறது வாக்காளர் சிறப்பு முகாம்
ADDED : ஜன 03, 2026 06:35 AM
திருவாடானை: திருவாடானை சட்ட சபை தொகுதியில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது.
திருவாடானை சட்ட சபை தொகுதியில் டிச.,19 நிலவரப்படி 1 லட்சத்து 36 ஆயிரத்து 38 ஆண்கள், ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 379 பெண்கள், பிறர் 22 என 2 லட்சத்து 73 ஆயிரத்து 439 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இத்தொகுதியில் 378 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. தற்போது பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் போன்ற பணிகள் துவங்கி உள்ளன.
தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது:
அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் இன்றும் (ஜன.,3), நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. முகாமில் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கை, நீக்கம், போட்டோ மாற்றம், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.
புதிய வாக்காளர்கள் 13 வகையான ஆவணங்களின் ஒன்றின் நகலை ஆதாரமாக வழங்கி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் என்றனர்.

