நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவு நாய்கள் ரோட்டில் சுற்றித் திரிகின்றன. கீழக்கரை பஜார், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட தெருக்களில் கூட்டமாக செல்லும் தெருநாய்களால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
நோய் பரப்பும் நாய்கள் பொதுமக்களை விரட்டி கடிக்கின்றன. நகராட்சி நிர்வாகத்தினர் வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.