/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
/
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ADDED : ஜூலை 03, 2025 09:51 PM
ராமநாதபுரம்; மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம் காத்தானில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தில் தடுப்பூசி முகாம் நடந்தது.
ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முகாமை துவக்கி வைத்தார். மாவட்டத்தில் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளது.
11 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஜூலை 31 வரை கால்நடைகளுக்கான தடுப்பூசி வழங்கும்முகாம் நடைபெற உள்ளது.
கால் மற்றும் வாய்க்காணை நோயானது நாட்டின மாடுகள், அயல் இன மாடுகள் மற்றும் கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதுடன் பால் உற்பத்தி இழப்பையும் ஏற்படுத்துகிறது. எனவே கால்நடை வளர்ப்போர் தவறாமல் முகாம்களில் பங்கேற்க வேண்டும்.
முகாமில் கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை தீவனங்கள் மற்றும் சத்துமாவை கலெக்டர் வழங்கினார். இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ரவிச்சந்திரன், உதவி இயக்குநர்கள் அரசு, சுந்தரமூர்த்தி ராஜா, கால்நடை மருத்துவ அலுவலர்கள் சித்திமாஜிதா, முருகராஜன், நந்திதா பங்கேற்றனர்.