/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் புதிய பாலத்தில் ரயில்வே அமைச்சர் ஆய்வு
/
பாம்பன் புதிய பாலத்தில் ரயில்வே அமைச்சர் ஆய்வு
ADDED : ஏப் 06, 2025 02:20 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.
இன்று(ஏப்.,6) பிரதமர் மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க உள்ள நிலையில் நேற்று இரவு 7:45 மணிக்கு மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், முருகன் ஆகியோர் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்திற்கு வந்தனர். பின் புதிய ரயில் பாலத்தின் துாக்கு பாலத்தை பார்வையிட்டனர்.
புதிய துாக்கு பாலத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே கட்டுமான நிறுவன தலைவர் பிரதீப் கவுர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றார்.