/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
111 வயது பாம்பன் ரயில் பாலம் அகற்றம் டெண்டர் கோரியது ரயில்வே
/
111 வயது பாம்பன் ரயில் பாலம் அகற்றம் டெண்டர் கோரியது ரயில்வே
111 வயது பாம்பன் ரயில் பாலம் அகற்றம் டெண்டர் கோரியது ரயில்வே
111 வயது பாம்பன் ரயில் பாலம் அகற்றம் டெண்டர் கோரியது ரயில்வே
ADDED : ஆக 23, 2025 08:12 PM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே 111 வயது பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாகம் டெண்டர் வெளியிட்டுள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலை பக்தர்கள் தரிசிக்கவும், தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு கப்பலில் சுற்றுலா பயணிகள் செல்லவும் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ஆங்கிலேயர்கள் ரயில் துாக்கு பாலம் அமைத்து 1914 பிப்.,24ல் தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்தை துவக்கினர். அன்று முதல் 2019 வரை கடலிலுள்ள இந்த ரயில் துாக்கு பாலம் வழியாக ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணித்தனர். 2019 நவ.,20ல் இப்பாலம் நடுவில் உள்ள ஜெர்ஷர் என்ற துாக்குப் பாலத்தில் உள்ள இரும்பு பிளேட் சேதமடைந்ததால் ரயில்கள் இயங்கினால் விபரீதம் ஏற்படும் என ரயில்வே நிர்வாகம் கருதியது. அன்று முதல் இந்த பாலம் வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்தை ரத்து செய்தது. பின் புதிய பாலம் கடலில் அமைக்கப்பட்டு ஏப்.,6ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
111 ஆண்டு ஆறாண்டுகளாக பயன்பாடின்றியுள்ள பாம்பன் பழைய ரயில் துாக்கு பாலத்தை பராமரிக்கவும், கப்பல்கள், படகுகள் பாலத்தை கடந்து செல்லும் போது துாக்கு பாலத்தையும் திறந்து மூட ஊழியர்கள் தேவைப்படுவதால் ஓராண்டுக்கு ரூ.பல லட்சம் செலவாகிறது.
இதனால் இப்பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான செலவினமாக ரூ. 2.81 கோடி ஒதுக்கீடு செய்து டெண்டர் வெளியிட்டுள்ளது.
ராமேஸ்வரம் தீவு மக்களின் நினைவு சின்னமாக விளங்கும் பாம்பன் ரயில் பாலம் விடைபெறும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 111 வயது ஆனாலும் 2019 வரை தொழில்நுட்ப கோளாறு, திறந்து மூடுவதில் சிக்கல் என எந்த பிரச்னையும் இன்றி கம்பீரமாக காட்சியளிக்கும் பழைய ரயில் துாக்கு பாலத்தை இளம் தலைமுறையினருக்கு நினைவுபடுத்தும் விதம் பாம்பன் அல்லது மண்டபம் ரயில்வே நிலையம் அருகே காட்சிப்படுத்த வேண்டும் என ராமேஸ்வரம் தீவு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

