/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழையால் வயலில் களைக்கொல்லி அதிகரிப்பு: மருந்து தெளிக்கும் பணி
/
மழையால் வயலில் களைக்கொல்லி அதிகரிப்பு: மருந்து தெளிக்கும் பணி
மழையால் வயலில் களைக்கொல்லி அதிகரிப்பு: மருந்து தெளிக்கும் பணி
மழையால் வயலில் களைக்கொல்லி அதிகரிப்பு: மருந்து தெளிக்கும் பணி
ADDED : அக் 27, 2025 03:32 AM

ஆர்.எஸ்.மங்கலம்: பருவ மழையின் காரணமாக ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் நெல் பயிர்களுக்கு இடையூறாக களைகளும் அதிகளவில் முளைத்து வருகின்றன. அவற்றை கட்டுப்படுத்த விவசாயிகள் நெல் பயிருக்கு களைக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள இருதயபுரம், நெடும்புளிக்கோட்டை, பெரியார் நகர், தும்படைக்காகோட்டை, பெத்தார்தேவன் கோட்டை, பொன்மாரி, மங்கலம், அத்தானுார் உள்ளிட்ட கிராமங்களில் செப்., மாதம் நெல் விதைப்பு செய்யப்பட்டது. கடந்த சில வாரங்களாக பெய்த பருவ மழையின் காரணமாக இப்பகுதிகளில் தற்போது நெல் பயிர்கள் முளைத்துள்ளன. அதே நேரத்தில், நெல் பயிர்களுக்கு இடையூறாக களைகளும் அதிகளவில் முளைத்துள்ளன.
இதனால், களைகளை கட்டுப்படுத்த விவசாயிகள் களைக்கொல்லி மருந்துகளை கைத்தெளிப்பான் மூலம் நெல் வயல்களில் தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சில விவசாயிகள், கூலி ஆட்கள் மூலம் நெல் பயிர்களுக்கு களை பறிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
திருவாடானை திருவாடானை தாலுகாவில் வயல்களில் களை செடிகள் அதிகளவு முளைத்துள்ளன. களை செடி வளர்ந்தால் பயிருக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் களைக்கொல்லி மருந்தை ஸ்பேரயர் மூலம் விவசாயிகள் அடிக் கின்றனர்.
களைகள் முளைக்கும் போதே இந்த மருந்தை அடிப்பதால் சில நாட்களில் களை செடிகள் கருகி மண்ணுடன் மக்கிவிடும். களைகள் வளர்ந்துவிட்டால் மருந்து அடித்தும் கட்டுபடுத்தமுடியாது. கூலி தொழிலாளர்கள் மூலம் களை எடுக்கவேண்டும். இதனால் அதிக செலவாகும். எனவே இப்போதே களைக்கொல்லி மருந்து அடிக்கிறோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

