/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாய நிலங்களை குளிர்வித்த மழை
/
விவசாய நிலங்களை குளிர்வித்த மழை
ADDED : நவ 21, 2024 04:24 AM
கடலாடி: திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி, கடலாடி, பெருநாழி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று முழுவதும் தொடர் மழை பெய்தது.
விவசாயிகள் கூறியதாவது:
கார்த்திகை முதல் வாரத்தில் பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு அதிகமாக பெய்துள்ளது. தொடர்ந்து பெய்த மழையால் களைக்கொல்லி இடவும், பயிர்களில் களை எடுப்பதற்கும் வசதியாக உள்ளது. கண்மாய், குளங்கள், நீர் நிலைகளில் தற்போது குறைந்த அளவே நீர் நிரம்பி வருகிறது.
இன்னும் கூடுதல் மழையை எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து பெய்யக்கூடிய பருவமழையை பொறுத்தே கோடை காலத்தில் நீர் நிலைகளில் வறட்சியை சமாளிக்க வசதியாக இருக்கும். பெரும்பாலான வயல்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது.எதிர்பார்த்த பருவமழை இன்னும் பெய்ய வேண்டும் என்றனர்.

