/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழை முன்னெச்சரிக்கை புயல் காப்பகங்கள் தயார்
/
மழை முன்னெச்சரிக்கை புயல் காப்பகங்கள் தயார்
ADDED : நவ 28, 2024 05:06 AM
திருவாடானை: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் காப்பகங்கள் தயார் நிலையில் வைத்திருக்க ஆய்வு செய்யப்பட்டது.
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பால் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி புயலாக மாறியதால் திருவாடானை, தொண்டி பகுதியில் இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. தொண்டி அருகே நம்புதாளை, முள்ளிமுனையில் உள்ள புயல் காப்பகங்களை தயார் நிலையில் வைத்திருக்க ஆய்வு செய்யப்பட்டது.
திருவாடானை தாசில்தார் அமர்நாத், தொண்டி வருவாய் ஆய்வாளர் மேகமலை மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். முகாம்களில் தங்க வைக்க வேண்டிய அளவிற்கு நிலைமை இல்லை. மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் காப்பகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.