/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் சூறாவளியுடன் மழை
/
ராமேஸ்வரத்தில் சூறாவளியுடன் மழை
ADDED : டிச 11, 2025 05:06 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சூறாவளியுடன் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.
நவ., 29, 30ல் டிட்வா புயலால் ராமேஸ்வரம் பகுதியில் கனமழை பெய்ததில் தாழ்வான பல இடங்களில் மழைநீர் தேங்கி வீடுகளை சூழ்ந்தது. தற்போது வரை தேங்கிய மழைநீர் வடியாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் பருவமழை மீண்டும் தீவிரமடைந்து நேற்று ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடத்தில் கனமழை பெய்தது.
இதனால் ராமேஸ்வரம் கோயில் நான்கு ரதவீதி, நகராட்சி அலுவலகம் முன்பு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 100 மீ.,க்கு மழைநீர் தேங்கியுள்ளது.
நேற்று காலை முதல் சூறாவளி வீசியதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.

