/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
7 ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கம்
/
7 ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கம்
ADDED : டிச 11, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாாமலை, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் புதிதாக ஏழு ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, கடலாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதிதாக சாயல்குடி ஊராட்சி ஒன்றியம், விழுப்புரம் மாவட்டத்தில் கிளியனுார், கஞ்சனுார் ஊராட்சி ஒன்றியங்கள், திருவள்ளுர் மாவட்டத்தில் மாதர்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலவாக்கம் ஊராட்சி ஒன்றியம், திருவண்ணாமலை மாவட்டத்தில் மலையூர் ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அஞ்செட்டி ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.

