தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பருவமழைக்கு முன் மழைநீர் செல்லும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்

பருவமழைக்கு முன் மழைநீர் செல்லும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்

பருவமழைக்கு முன் மழைநீர் செல்லும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்


ADDED : அக் 01, 2026 12:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 12:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.மங்கலம்: மழைக்காலத்திற்கு முன் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி மாதாந்திர கூட்டம், பேரூராட்சி தலைவர் மவுசூரியா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ராஜு, செயல் அலுவலர் மாலதி முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு: வைரவன் (தி.மு.க): முன்னெச்சரிக்கையாக டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பன்றிகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலு (தி.மு.க): குப்பை வண்டிகள் முறையாக தெருக்களுக்கு வருவதில்லை. குடிநீரும் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை.

விஜயன் (தி.மு.க): மழைக்காலம் துவங்க உள்ள நிலையிலும், பேரூராட்சி பகுதியில் உள்ள கால்வாய்கள் சீரமைப்பு செய்யப்படவில்லை.

இதனால் மழைக்காலத்தில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழும் நிலை உள்ளது. பொது நிதியில் பணிகளை மேற்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

புதிய அரசு பொறுப்பேற்ற பின்பு பேரூராட்சிக்கு நிதி ஒதுக்கவில்லை. 4 மாதமாக புதிய ஆட்சி நிர்வாகத்தில் பவர் கட்தான் உள்ளது.

செயல் அலுவலர் மாலதி: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பொது நிதியில் இருந்து குறிப்பிட்ட பணிகளை மட்டும் மேற்கொள்ளும் வகையில் நிதி பயன்படுத்தப்படுகிறது என்றார்.

சரண்யா (தி.மு.க): கம்பர் தெரு ரோடு மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சீரமைப்பு செய்ய வேண்டும்.

அனுராதா (பா.ஜ.,): கடந்த 4 மாதங்களாக மட்டுமே நிர்வாகத்தில் பவர்கட் ஏற்பட்டுள்ளதாக தி.மு.க., உறுப்பினர்கள் கூறுகின்றனர். ஆனால், எங்களைப் பொறுத்த வகையில், கடந்த தி.மு.க., ஆட்சி துவங்கியதில் இருந்தே அனைத்திலும் பவர் கட்தான்.

சுதாகர் (காங்.,): குடிநீர், சொத்து வரி என வரி வசூல் செய்யும் பணம் எங்கே செல்கிறது. அந்த வரிப்பணத்தில் இருந்து மக்களுக்கான ரோடு,

குடிநீர் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தலைவர்: பொது நிதியிலிருந்து குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்வதற்கும், போர்க்கால அடிப்படையில் கால்வாய் சீரமைப்புக்கும் கலெக்டரை சந்தித்து கோரிக்கை விடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us