ADDED : அக் 19, 2025 09:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் ரோட்டோரத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கடந்த சிலநாட்களாகவே அவ்வப்போது மழை பெய்கிறது. இதனால் தெருக்கள் மற்றும் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது.
முதுகுளத்துார் பஜார், ஆற்றுப்பாலம், பஸ் ஸ்டாண்ட் ரோட்டோரத்தில் தண்ணீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்பதால் நடந்து செல்பவர்கள் சிரமப்படுகின்றனர்.
பள்ளம் இருப்பது தெரியாமல் டூவீலரில் செல்பவர்கள் கீழேவிழும் சூழ்நிலை உள்ளது.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ரோட்டோரத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள னர்.