/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முருகன் கோயில்களில் கந்த சஷ்டிவிழா அக்.,22ல் துவக்கம்
/
முருகன் கோயில்களில் கந்த சஷ்டிவிழா அக்.,22ல் துவக்கம்
முருகன் கோயில்களில் கந்த சஷ்டிவிழா அக்.,22ல் துவக்கம்
முருகன் கோயில்களில் கந்த சஷ்டிவிழா அக்.,22ல் துவக்கம்
ADDED : அக் 19, 2025 09:23 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பெருவயல் ரெணபலி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா (நாளை மறுநாள்) அக்.,22ல் காப்புக்கட்டுதலுடன் துவங்கி அக்.,28 வரை நடக்கிறது.
ராமநாதபுரம் சமஸ் தானத்திற்கு சொந்தமான பெருவயல் கிராமத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோயில் உள்ளது.
இங்கு கந்தசஷ்டி விழாவையொட்டி நாளை மறுநாள் மாலை 5:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் அபிஷேக ஆராதனையுடன் காப்புக்கட்டுதல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து விழா நாட்களில் அபிஷேகம், அலங்கார தீபாராதனை உள்பிரகாரம் சுவாமி உலா நடக்கிறது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக அக்.,27ல் சூரசம்ஹாரம், அக்., 28ல் திருக்கல்யாணம் நடை பெறுகிறது, ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.
சாயல்குடி: சாயல்குடி வள்ளி தேவசேனா சமேத வழிவிடு முருகன் கோயிலில் கந்த சஷ்டி மற்றும் திருக்கல்யாண விழா நடக்கிறது. அக்., 22 புதன்கிழமை அன்று பக்தர்களுக்கு காப்பு கட்டுகளுடன் விழா துவங்குகிறது.
அக்., 27 அன்று மாலை 5:30 மணிக்கு உற்ஸவமூர்த்தி எழுந்தருளி சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், இரவு 7:0 மணிக்கு வேலுக்கு அபிஷேகமும் நடக்கிறது. மறுநாள் லிங்கேஸ்வர பூஜைக்கு பிறகு திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது.
தினமும் வேலுக்கு அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருச்செந்தில் ஆண்டவர் பாதயாத்திரை குழு மற்றும் திருச்செந்துார் வைகாசி விசாக குழுவினர் செய்கின்ற னர்.--------