/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கை கோயிலுக்குள் மழைநீர்
/
உத்தரகோசமங்கை கோயிலுக்குள் மழைநீர்
ADDED : அக் 16, 2025 10:00 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பெய்த கன மழையால் உத்தரகோசமங்கை மங்களநாதர் சிவன் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி கோயிலில் அபூர்வ பச்சை மரகத நடராஜர் சன்னதி உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஏப்.4ல் கும்பாபிேஷகம் நடந்தது.
இந்நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை தொடர்ந்து மழை பெய்ததால் ரோட்டில் இருந்து தண்ணீர் கோயிலுக்குள் புகுந்தது. வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கியது.