/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பூச்சி மருந்து, அழகுசாதனப் பொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்ற இருவர் கைது

ADDED : அக் 16, 2025 09:59 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே நத்தக்குளம் கடற்கரை பகுதியில் இருந்து பூச்சி மருந்து, அழகு சாதன பொருட்களை படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற இருவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் நத்தக்குளம் பகுதியில்ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலையில் கடற்கரையில் இருந்து படகில் பொருட்களை சிலர் ஏற்றிக்கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் படகுடன் சிலர் தப்பிச் சென்ற நிலையில் கரையில் இருந்த அழகன்குளத்தை சேர்ந்த 18 வயது சிறுவன், பெருங்குளம் கந்தன் மகன் முகிலன் 23, ஆகிய இருவரை கைது செய்து 38 மூடைகளை பறிமுதல் செய்தனர்.
அதில் பூச்சிக்கொல்லி மருந்துகள், சோப்பு, முக பவுடர், கிரீம் பாக்கெட்கள் மற்றும் நெய் பாட்டில்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.6 லட்சம். கைதானவர்களை ராமநாதபுரம் சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.