/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேசிய நெடுஞ்சாலையில் கழிவாக மாறிய மழை நீர்: வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

ADDED : மே 04, 2025 06:20 AM

பரமக்குடி: பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தேங்கிய மழை நீர் கழிவாக மாறிய நிலையில் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.
பரமக்குடி ஓட்டப்பாலம் துவங்கி ஐந்து முனை ரோடு மற்றும் ஆர்ச் உள்ளிட்ட நெடுஞ்சாலை ஓரங்களில் மழைநீர் அதிகளவு தேங்குகிறது. இப்பகுதிகளில் நெடுஞ்சாலை சார்பில் இரண்டு ஓரங்களிலும் மழை நீர் வழிந்தோட வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டுகளிலும் மழை நீரை கடத்த பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட வாறுகால்கள் பயனின்றி இருக்கிறது. தொடர்ந்து நெடுஞ்சாலைக்கும், வாறுகாலுக்கும் இடையில் ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிக்கப்பட்டு மணல் மேடாக்கப்பட்டுள்ளது.
இதனால் மழைநீர் வழிந்தோட முடியாமல் நெடுஞ்சாலையின் இரண்டு ஓரங்களிலும் சகதிக்காடாகி நிற்கிறது. இதன் வழியாக செல்லும் டூவீலர் மற்றும் பாதசாரிகள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
ஆகவே நெடுஞ்சாலையை பராமரிக்க உடனடியாக மழை நீர் வழிந்தோடும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என வாகன ஓட்டிகள், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.