/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தங்க காசு ஆசையால் 6 பவுன் இழந்த பரிதாபம்
/
தங்க காசு ஆசையால் 6 பவுன் இழந்த பரிதாபம்
ADDED : ஆக 11, 2011 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்(30).
அதிகரை நெடுங்குளத்திற்கு முளைக்கொட்டு திருவிழாவிற்கு சென்றார். பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் மதியம் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவர் தன்னிடம் 10 கிராம் எடை கொண்ட ஒன்பது தங்க காசுகள் உள்ளன.
அதற்கு பதில் அணிந்திருக்கும் 6 பவுன் நகையை தருமாறு கேட்டார். தங்கக் காசுகள் அனைத்தும் உண்மையானவை என நினைத்து தன்னிடம் இருந்த 5 பவுன் சங்கிலி,ஒரு பவுன் மோதிரம் ஆகியவற்றை கழற்றி கொடுத்தார். வீடு திரும்பிய பின் தங்க காசுகள் போலி என தெரியவந்தது. இவரது புகார்படி, பரமக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

