நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சீலாமீன் வரத்து அதிகரிப்பால் கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்தது.
மீன் வகைகளில் மிகவும் ருசியானது சீலா. கடந்த வாரம் வரை கிலோ 440 ரூபாய்க்கு விற்கபட்டது. கடந்த மூன்று நாட்களாக கிலோவுக்கு 100 ரூபாய் சரிவு ஏற்பட்டதால், மக்கள் தற்போது ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். வழக்கமாக பண்டிகை காலங்களில் சீலா மீன் விலை அதிகரிப்பது வழக்கம். இந்தாண்டு ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் யப்பை ஏற்படுத்தியுள்ளது. மீன் வியாபாரி முகம்மது முஸ்தபா கூறியதாவது: கடந்த சில நாட்களாக சீலா மீன்பாடு அதிகரித்து, விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் தொடர்ந்து நீடிக்க வாய்ப்பில்லை. வரவுள்ள சீசனில் இதன் வரத்து இயல்பாகவே குறையும், என்றார்.