ADDED : செப் 11, 2011 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி : சாயல்குடி சிக்கல் அருகே பேய்க்குளம் கிராமத்தினர் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு சொக்கானை வழியாக ஜோதி ஏந்திச் சென்றனர்.
அப்போது இருதரப்பினர் மோதிக் கொண்டனர். கல்வீச்சில் சண்முகவேல், மாரிமுத்து, கருப்பணன், பச்சமாள் காயம்பட்டு முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிக்கல் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.
* தொண்டி கிழக்கு கடற்கரை ரோட்டில் சம்பை அருகே இமானுவேல் நினைவு தினத்திற்கு சென்றவர்கள் மரங்களை வெட்டி ரோட்டின் குறுக்கே போட்டனர். டி.எஸ்.பி. மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் தனபால் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய பின் மறியல் கைவிடப்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.